Tuesday 30 January 2018

இரகசியம்

அத்தியாயம் 1: இரகசியம்

“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பராந்தக  மகாராஜா, பராக்!” என்று ரவி முன் கூவினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு இது கண்டிப்பாக கனவாகதான் இருக்க முடியும் என்ற நம்பினான். தான் இதுவரை சினிமாவில் பார்த்த ராஜாக்கள் போல் அவர் இல்லை, தன் அருகே அவர் வருவதை உணர்ந்தான். “மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன்”

ரவி தூக்கத்திலிருந்து எழுந்தான். “செ.. கனவா”, சுற்றி பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவன் இருக்கும் இடம் புதிதாக இருந்தது. எவ்வளவு யோசித்து பார்த்தும் எப்படி இங்கே வந்தோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, அவன் இருந்த அறை ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ஏதோ ஆய்வகம் போல் இருந்தது. தன்னை சுற்றி ஒரு கண்ணாடி திரை உள்ளதை அதில் இடித்துக்கொண்ட பின் தான் தெரிந்தது.

“யாராவது இருக்கீங்களா? நான் எங்க இருக்கேன் நீங்கயெல்லாம் யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல, கதவ திறங்க” பூட்டிய கதவை நோக்கி தன்னால் முயன்றவரை கத்திக்கொண்டிருந்தான் ரவி.

தான் சிறைப்படுத்தப்பட்டுள்ள  அறையை சுற்றிப்பார்த்தான், காலியான அறையின் நடுவே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் இருந்தன. அறை மேலிருந்த சிறிய இடைவெளி மூலம் வெளிச்சம் பரவியது. காலடி ஓசை கேட்டவுடன் “யாரா அது, விளையாடாதீங்கடா, ரூம திறந்து விடுங்கடா என்று புலம்பினான்.

கதவு திறக்கப்பட உள்ளே இருவர் நுழைந்தனர். “ சார், அந்த சேர்ல உட்காருங்க, எங்க பாஸ் உங்ககிட்ட பேச வர்றார்”

“மரியாதயெல்லாம் வேனாம்டா, என்ன இப்படியே விட்ருங்க, நான் அப்படியே ஓடிபோயிடுவேன்.” என்றான் இரவி. அவ்விருவர் மூலம் உட்காரவைக்கப்பட்டான்.

சில நிமிடங்களில் ஒருவர் வந்து மேஜையின் எதிரில் உட்கார்ந்தார். “வெல்கம் மிஸ்டர் இரவி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்”. “ யார் சார் நீங்க, ஒரு காரணமும் இல்லாம் என்ன இங்க கடத்திட்டு வந்து இப்ப என்னவோ நலம் விசாரிக்குறீங்க?”.ரவி வினவினான்.

என் பேர் இராமானுஜம், உங்ககிட்ட இப்ப சொல்ல போற விஷயத்தை கவனமா கேளுங்க.” நீங்க கனவு கான்பது உண்டா?” ரவி உடனே “என்ன சார் என்ன வெச்சு ஏதாவது காமடி பண்றீங்களா, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் யாரு, எதுக்கு இப்போ தேவயே இல்லாம இந்த கேள்வி” என்று கத்தினான்.”

“கொஞ்சம் பொறுமையா கேளுங்க, உங்க கனவ பத்தி நான் இப்போ சொன்னா நீங்க என்ன நம்புவீங்கனு நினைக்குறேன்.” இராமானுஜம் ரவி கண்ட கனவை கூட இருந்து பார்த்ததுபோல் விவரித்தார்.மேலும் “ரவி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே, கணவு இல்லை” என்று முடித்தார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமானுஜம் அடுத்து சொன்னதை கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.“நான் தான் அவர்னு நீங்க சொன்னீங்கனா நீங்க என்ன பைத்தியமா”. என்று கூறிய ரவிவை செய்கையில் அமைதியாய் இருக்க சொல்லி அவர் மேலும் தொடர்ந்தார்.

"நினைவு என்றால் என்ன?"

"ம்..ஞாபகப்படுத்தி கொள்ளுதல்"

"அதாவது குறிப்பிட்ட நபரின் நினைவு சரிதானே"

"ம்.."

"அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் இல்லாமல் அவருடைய முன்னோர்களின் நினைவும் அவனிடையே இருக்கும் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்."

"போன வாரம் நடந்தத பத்தி கேட்டாவே நான் யோசிப்பேன். நீங்க என்னனா, நம்புற மாதிரி சொல்லுங்க"

"மரபுசார் நினைவாற்றல். புலம்பெயர்வு . செயலற்றிருத்தல் இனப்பெருக்கம் இவையெல்லாம் விலங்குகளுக்கு யார் சொல்லித்தந்தது. என்னுடைய முப்பது ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் இந்த மரபுசார் நினைவாற்றல். நம்முடைய மரபணுக்களில் நமது முன்னோர்களின் வழிமுறையையும் சேர்த்து, அவர்களின் நினைவுகளையும் நாம் கண்டறிய முடியும். அத்ற்க்கான பொறியையும் நான் கண்டுபிடித்துவிட்டேன்."

"நீங்க சொல்றது நம்பவும் முடியல, நம்பாவமும் இருக்க முடியல, அப்ப என்ன பத்தி சொன்னது உன்மைதானா?"

"உங்க மரபணுவும் அகழ்வாராய்ச்சியில் கிடச்ச அவரோட மரபணுவும் நூறு சதவிகிதம் சரியாக பொறுந்துகிறது.ஆமாம் மிஸ்டர் இரவி நீங்கதான் பல தலமுறைக்கு முன்னால் வாழ்ந்த "இராஜ இராஜ சோழன்." அவர்களுடைய வாரிசு. உங்களுடைய மரபணு நினைவுகள் மூலம் நாம் பல ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்."

அத்தியாயம் 2: பொறி

ஆச்சிரியத்தில் இருந்த  ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்.  சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.  சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள்  சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி,  ரவி, இவங்க தான் என்னோட இந்த  ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.

"நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது" என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.

"மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க" பயத்துடன் ரவி வினவினான்.

"கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை.  உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல்  கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்."

"அப்ப என் வேலை"

"அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை  உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா?"

"கனவா இல்லை நினைவா"

"சபாஷ்.  உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும்  உங்கள் நினைவுகள் மறுபடியும்  பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்."
சாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.

"திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது."

" ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க  முடியும்."

ரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.

"சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க".

"அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… "

மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ”

தன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ)  ராஜ ராஜ சோழன்.

அத்தியாயம் 3: இரத்த அரியணை

அடுத்த நாள் காலை

நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா?” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

நீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.

சோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில்  ஐந்து மன்னர்கள்  சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன்  எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன.  ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.

“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால்  நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,

மரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது.

மேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.

“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”

“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும்.  இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”

அவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு  மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு  கண்டிப்பாக  ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த  மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு,  நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”

“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”

“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும்.  என  உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”

“வாழ்த்துக்கள் சார்”

“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன,  இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”

“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.

அத்தியாயம் 4. முதல் பலி

குருவின் ஆனைப்படி தனது முதல் இலக்கான தன் சகோதரனான அதித்ய கரிகாலனை பாண்டியர்கள் உடனான செவ்வூர் போரில் எதிரிகள் வேடமிட்டு தந்திரமாக கொலை செய்தான். போரில் பாண்டிய ஒற்றர்களால் கொலைசெய்யப்பட்டான் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.

குருவின் ரகசிய இருப்பிடத்தில் சந்தித்தான் அருண்மொழிவர்மன்.

“வணக்கம் குருவே”

“வருக வீரனே, குருவின் பெறுமையை நீ காப்பாற்றிவிட்டாய், நீ ஒரு செயல்வீரன் என்பதை நிருபித்துவிட்டாய், என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டாய், அதித்ய கரிகாலலின் இழப்பு சோழ சாம்ராஜ்ஜியத்தில் பலத்த சலனத்தை உருவாக்கும், , உன் மாமா உத்தமன் அரியணையில் அமர்வதற்கு தயாராக இருக்கிறான், இப்போது அவன் அரசனாக பதவி ஏற்கட்டும், எப்படியும் அதித்ய கரிகாலனின் கொலை மீதான சந்தேகம் மக்கள் மனதில் இருக்கும், அது அடுத்து அரியணையேரும் அரசனின் செயல்தான் என்று பெறும்பாலோர் நம்புவர், அரியணையில் ஏறுவது நம் முதல் நோக்கமல்ல, மக்கள் மனதில் இடம்பிடிப்பதே நம் முதல் நோக்கமாகும்..”

“சரி குருவே, அவன் ராஜ்ஜியத்திற்கு பின் உத்தமன் அவன் மகனுக்கு முடிசூட்டிவிட்டால் நாம் என்ன செய்வது.”

“அப்போதுதான் மக்கள் உன் பக்கம் இருப்பதை நீ சாதகமாக்கிக்கொள்ள வேண்டும், நீ உத்தமனை சந்தித்து, அவன் ஆட்சியில் பொறுப்பேர்க்க உனக்கு எந்த பிரச்சனையில்லை, ஆனால் அவனுக்குபின் உன்னைதான் அரசனாகமுடிசூட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உத்தமனின் முத்திரையை வாங்கிவிடு. அரசனாகும் ஆசையில் அவனும் இந்த ஒப்பந்தத்தில் உடன்படுவான்.”

“சரி குருவே, நான் உடனே சோழ தலைநகரத்திற்கு புறப்படுகிறேன்.”

“வெற்றி உனக்கே.”  என வாழ்த்தி அனுப்பினார்.

ரவி, ரவி, என பொறியில் படுத்திருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம்.

“இப்போது என்ன நடந்தது, ஏன் எழுப்பினீர்கள்.”

“உங்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை, ஓய்வறைக்கு செல்லுங்கள்.” என்று கூறி ஆய்வகத்தை விட்டு கிளம்பினார்.”

ஆய்வகத்தில் இருந்த திவ்யாவிடமிருந்து தனக்கு சாதகமாக ஏதாவது பதில் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளிடம் பேசினான் ரவி.”

“இங்க என்ன நடக்குதுனு நீங்களாவது சொல்லுங்க”

“மன்னிச்சிடுங்க ரவி, உங்ககிட்ட எதுவும் பேச கூடாதுனு எங்க பாஸ் உத்தரவுபோட்டிருக்கார்.”

“என் நிலமையில் இருந்து கொஞ்சம் பாருங்க, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் விஞ்ஞானியா இல்ல தீவிரவாதிங்களா, என்ன ஏன் இங்க கொண்டுவந்தீங்க, இல்ல, கடத்திக்கிட்டு வந்தீங்களானு ஒன்னுமே புரியில, பிளீஸ்  ஏதாவது சொல்லுங்க.”

“உங்களுக்கு இதுவரை தெரிந்ததே போதுமானது மற்றும் பாதுகாப்பானது.”

“பாதுகாப்பா, யாருக்கு? உங்களுக்கா இல்லை எனக்கா”

அமைதியாய் இருந்த திவ்யாவை பார்த்து, இனிமேல் இவளிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை, நேரடியாக ராமானுஜத்திடமே பேச வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினான்.

ஓய்வறையில் இருந்த ரவி ராமானுஜத்தின் வருகைக்காக  காத்திருந்தான்.

அடுத்த நாள் காலை,

“வாங்க ரவி, ஆய்வகத்திற்கு செல்லலாம், இனி காலம் பொன் போன்றது.” உறங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம். ரவியும் பின்தொடர்ந்து சென்றான்.

“திவ்யா வரும்வரை காத்திருப்போம், ஆமாம் ரவி என்னுடன் பேச வேண்டும் என்று கூறினீர்களா?”

“ம். இந்த ஆய்வில் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? முன்பு நீங்கள் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லையே”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை என்று சொல்லியது நினைவில் இருக்கிறதா? இப்போது இவ்வுலகில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா”

“ம், நினைவில் இருக்கிறது, அதற்கும் இப்போது நடைபெறுவதற்கும் என்ன சம்பந்தம்”

“இவ்வுலகம் குழப்பங்களின் உச்சத்தில் இருக்கிறது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உன் மூதாதயர்கள் துவங்கி இன்று வரை இந்த சமூகம் அதே குழப்பத்தில் இருக்கிறது, பதவியாசை, காட்டுமிராண்டித்தனம் என அனைத்தும் ஒன்று கூடி இந்த உலகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.”

“ சரி, இப்பொழுது என்ன சொல்ல வருகுறீர்கள், உங்கள் நிலை என்ன?”

“ஒழுக்கம் ரவி, உலகத்தில் ஒழுக்கம் தேவைபடுகிறது, அதை நோக்கித்தான் நாம் வேலை செய்ய  செய்துகொண்டிருக்கிறோம், இந்த உலகத்திற்கு ஒழுக்கத்தை புகட்டப்போகிறோம்.”

“ம்.. ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் உறுவாக்குகிறோம் என்று சொல்வது நம்பும்படியில்லை”

“உங்கள் நம்பிக்கை எனக்கு முக்கியமில்லை, ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு  அதுதான் சரியான பதில், மனித இனம் ஒரு சரியான திசையை தேடுகிறது, இங்கு எதற்காக வந்திருக்கிறோம், எதை செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை நாம் தரப்போகிறோம். எப்படி வாழப்போகிறோம் என்ற பதில் தெரிந்தவுடன் அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும்”

“அது எப்படி நடக்கும்”

“உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும், அதுதானே உன் கனவு, அருண்மொழிவர்மா”

“நான் அவன் இல்லை, இன்னும் இங்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை”

“காலம் உங்களுக்கு புரிய வைக்கும், உங்களுக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அது எங்கே இருக்கிறது என்றும் சொல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.”

“எது எங்கே இருக்கிறது, எனக்கு ஒன்றும் புரியவில்லை”

"கால இயந்திரம்"

அத்தியாயம் 5 "பிரளயம்"

குருவின் ஆணைப்படி அனைத்து செயலகளிலும் ஈடுபட்டான் அருண்மொழிவர்மன், தன் உடன்பிறந்தவர்கள், படைத்தலைவர்கள், அடுத்த தலைமுறை வாரிசுகள் என அனைவரையும் களைப்பறித்தான், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை தேர்ந்தெடுத்து அனைத்து முக்கிய துறைகளிலும் அமர்த்தினான். ராஜ்ஜியத்தில் இவ்வளவு நடந்தும் உத்தமன் ஒரு பொம்மை அரசனைப்போல் எதையும் கண்டுகொள்ளாமல் ஆட்சிபுரிந்துக்கொண்டிருந்தான்.

குருவை காண சென்றுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன், குதிரையை செலுத்திக்கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்த மரக்கிளையில் சிக்கி தூக்கி எறியப்பட்டான், தலையில் அடிப்பட்டதால் வழி ஓரத்தில் அப்படியே மயங்கி விழுந்தவன் சிறிது நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து அருகிலிருந்த ஓடையில் முகம் கழுவி சிறிது நீரை பருகினான்.

அவ்வழியாக புலிச்சின்னம் பொறித்த பல்லக்குடன் சென்ற வீரர்களை கவனித்தான், அவர்களை இடமறித்து,”இங்கு எங்கே செல்கிறீர்கள், பல்லக்கில் இருப்பது யார்” என வினவினான்.

திகைத்து நின்ற வீரர்களை ஒதுக்கிவிட்டு பல்லக்கின் திரையை விலக்கினான். சிறிது காலத்திற்கு முன்பு அவன் கொலை செய்த தெற்கு சோழ மண்டலத்தின் படைத்தலைவரின் உடல் இருந்தது.

“நீங்கள் இப்படி அமைதியாக இருந்தால் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும், ம்.. சொல்லுங்கள்” என மிரட்டினான்.

“மன்னித்துவிடுங்கள் இளவரசரே, காட்டில் இருக்கும் ஒரு முனிவர் எங்களிடம் அவ்வப்பொழுது சில இடங்களை சொல்லி அங்கிருந்த இறந்த உடல்கலிருந்து சில பொருட்களை எடுத்துவர சொல்வார், சில நேரம் வெறும் ரத்த மாதிரியையும், சில நேரம் வெறும் மயிரையும் எடுத்துவர சொல்வார், அதற்கு நல்ல சன்மானமும் கொடுப்பார்.” என பயந்தபடி கூறினர்.

அவர்கள் கூறிய அடையாளத்தின் படி இவர்களை வேலை வாங்கியது தன் குருதான் என்பதை தெரிந்து கொண்டான். அந்த நிகழ்விற்கு பிறகு சற்று குழப்பத்துடன் காணப்பட்ட அருண்மொழிவர்மன், தன்னை சுற்றி  நடக்கும் விஷயங்கள் சற்று யோசித்தால் சிறிதும் புலப்படவில்லை என்பதை அறிந்தான். தன்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அந்த குருவை பற்றி யோசித்து பார்க்கையில் இன்னும் குழம்பினான், எப்பொழுதிலிருந்து இவருடன் பழக்கம் ஏற்பட்டது,  இவர் யார்? அவருடைய அடிமைபோல் செயல்பட என்ன காரணம், , ஒருவேளை இவர் எதிரி நாட்டு மந்திரவாதியா, தன்னை வசியப்படுத்தி இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தையே அழிக்கப்பார்கிறவரா, போன்ற பல கேள்விகள் எழுந்தன, இன்று அதற்கு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் குதிரையை வேகமாக செலுத்தினான்.

“வா அருண்மொழிவர்மா, நமது திட்டம் எவ்வாறு சென்றுக்கொண்டிருக்கிறது”

“நீங்கள் சொன்னபடி அனைத்தும் செய்துகொண்டிருக்கிறேன்.” என கூறிய அருண்மொழிவர்மனை பார்த்து,

“என்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என நினைப்பது போல் இருக்கிறதே? உன் மனதில் இருப்பதை சொல்”

“ஒவ்வொரு முறை நீங்கள் சொல்லும் ஆட்களை நான் கொலை செய்த பின் அவர்களுடைய பிரேதத்தை எடுக்க தனியாக ஆட்களை அனுப்புகுறீர்கள், உங்களை குருவாக நான் எப்போது தேர்ந்தெடுத்தேன், என் நினைவில் உள்ளவரை நீங்கள் யார் என்ற விஷயத்தை என்னிடம் சொன்னது கிடையாது, உங்களை பற்றிய நினைவுகள் என் மனதில் துளிகூட இல்லை, உங்கள் கட்டளைப்படி அடங்கும் நாய் போல என்னை மாற்றிவிட்டீர்கள், நீங்கள் யார்?”

“என்னை கேள்வி கேட்கும் அள்விற்கு வளர்ந்துவிட்டாயா?”

“உங்களை கேள்வி கேட்கவில்லை, இது என் கட்டளை, பதில் சொல்லுங்கள், நீங்கள் யார், நான் இவ்வளவு கொலை செய்ததற்க்கு உண்மையான காரணம் என்ன, இறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன, இனிமேல் என்னை ஏமாற்ற முடியாது.”

“அனைத்தும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆம் நீ கொலை செய்த அனைவரும் ஒரு கழகத்தை சேர்ந்தவர்கள், இந்த உலகத்தை தங்களுக்கு கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், அவர்களிடம் அதற்கான பொறி உள்ளது. கால ஓட்டத்தில் முன் சென்று அங்கிருக்கும் நவீன ஆயுதங்களை கைப்பற்றி அதன் மூலம் இவ்வுலகை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இப்பொழுது உன்னுடைய எதிர்கால தலைமுறையினரைக் கண்டுபிடித்து அவர்களின் மரபணு நினைவுகள் மூலம் நம்முடைய திட்டத்தை கண்டறிந்து நம்மை அழிக்க நினைக்கின்றனர்.”

“நீங்கள் சொல்வது அனைத்தும் புதிராக இருக்கிறது, அப்படியே அவர்களிடம் காலத்தை கடக்கும் பொறி இருந்தாலும் அது எப்படி உங்களுக்கு தெரியும், இல்லை இவைஅனைத்தும் என்னை ஏமாற்ற நீங்கள் சொல்லும் கதையாகவும் இருக்கலாம், எதுவும் நம்பும்படியில்லை.”

“யாராக இருந்தாலும் சந்தேகம் வரும், அந்த பொறியைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் அதனால் ஏற்படும் ஆக்கத்தையும், அழிவையும் நேரில் பார்த்தவன் நான்”

“என்ன! நீங்கள் கண்டுபிடித்ததா?” ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்மொழிவர்மன்.

“ஆம் என் கண்டுப்பிடிப்பை திருடிக்கொண்டு அதன் மூலம் இவ்வுலகை தனக்கு அடிமையாக்க நினைக்கிறான் என் பழைய உதவியாளன்.”

“அவன் யார், அவனின் இந்த தீய செயலை நிறுத்த வேண்டும், அவனைப்பற்றி முததில் சொல்லியிருந்தால் என் வாளுக்கு இரையாக்கிருப்பேனே..”

“அவன் தீயவனாக இருந்தாலும் புத்திசாலி, நீ அவனை கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறான்.”

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், அவன் பெயரை மட்டும் சொல்லுங்கள், இவ்வுலகில் எங்கிருந்தாலும் அவனைக்கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

“அவன் பெயர் ராமானுஜம், அவன் இருப்பது இதே இடத்தில்தான் ஆனால்…”

”என்ன தயக்கம், சொல்லுங்கள்”

“எதிர்காலத்தில்”

அத்தியாயம் 6. மரணம்

மேஜையிலிருந்த ரவியை எழுப்பிய ராமானுஜம்,  “நேரம் வந்துவிட்டது, எழுங்கள், இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு தேவை, நாளையுடன் நம் ஆய்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிடும்”

மூளையின் அதீத உழைப்பால் மிகுந்த அசதியில் இருந்த ரவி மேஜையில் இருந்து எழுந்து அப்படியே ஓய்வறைக்கு சென்றான். இரவு முழுவதும் தான் மரபணு நினைவில் கண்டதை எண்ணி, நாளை எப்படியும் இந்த ராமானுஜத்தை பற்றியும் அவருடைய ஆராய்ச்சியின் உண்மை நோக்கத்தையும் அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான்.

அடுத்த நாள் காலை,

ரவி, இன்னும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? காலம் இனி பொன் போன்றது.

“ம்.. சரி, எப்படியும் என்னை நீங்கள் விடப்போவதில்லை, என் கேள்விகளுக்காவது பதில் சொல்லுங்களேன். இங்கு என்னதான் நடந்ததுக்கொண்டிருக்கிறது”

“நான் என்ன முட்டாளா, உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதை நான் அறிவேன்.”

“நீங்கள் எதை பற்றி  சொல்கிறீர்கள்  என்று தெரியவில்லையே,?” மழுப்பினான் ரவி.

ராமானுஜம் சிரித்துக்கொண்டே “அமாம், உங்களுக்கு எப்படி தெரியும்”

“சரி உங்களிடம் வேறொன்று  கேட்க வேண்டும்”

“ம்.. கேளுங்கள் ”

“சில விஷயங்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருக்கிறது, உண்மையாக இல்லை, வரலாறு தவறாக இருக்கிறது. எதிலும் பொறுத்தம் இல்லையே.”

ராமானுஜம் இடமறித்து “பொறுத்தமா? எதனுடன், உங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததுடனா,  வரலாறு புத்தகத்திலா இல்லை விக்கிபீடியாவில் பார்த்ததா”

“புத்தகங்கள், வரலாற்றுப்பதிவுகள், ஆவணங்கள் என அனைத்தையும் ஒப்பிடும் போது நான் பார்த்த விஷயங்கள் பெரிதும் வேறுபட்டிருக்கிறதே” என்றான் ரவி.

 “ரவி, ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எழுதலாம், எதைபற்றியும் எழுதலாம், இன்று வரலாற்றை பற்றி அறிய நாம் உபயோகிக்கும் புத்தகங்கள், கல்சுவடுகள், ஓலைச்சுவடிகள் என ஏறத்தாழ  அனைத்தும் உலகம் தட்டையானது என்று நம்பியவர்கள் எழுதியது, ஏன், உலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஒரு புத்தகம் சொல்கிறதே, இன்னும் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் அது, ”

“சரி, இப்போது என்ன சொல்ல வருகுறீர்கள்.”

“உண்மையான வரலாறு என்று ஒன்றும் இல்லை, இந்த வேளையில்தான் நான் கண்டுபிடித்த பொறி உதவி செய்கிறது, தவறான புரிதலுக்கு வாய்ப்பே இல்லை”

“தவறில்லாமல் எதுவுமே இல்லை”

“என்ன ரவி பேச்சில் நிறைய வித்தியாசம் தெரிகிறது, அது சரி, நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன், நாம் ஆய்வகத்திற்கு இப்போதாவது செல்லலாமா?”

“உண்மையிலேயே இவர் கடந்த காலத்தில் இருந்து வந்தவர்தானா, அப்படி இருந்தால் தன் நினைவில் பார்த்த குரு சொன்னது போல் இவர் சார்ந்த கழகம் இந்த உலகத்தை ஆள செய்யும் திட்டத்திற்கு நாம் துனைப்போகிறோமா, அப்படி இவர் தீயவராக இருந்தால் இந்நேரம் நடந்த விஷயங்களை தெரிந்துக்கொண்டிருப்பாரே, என்னை ஏன் இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறார், கால இயந்திரத்தை பற்றி சென்றமுறை கேட்டது உண்மையா, இல்லை அதுவும் தன்னை திசை திருப்ப செய்த சதியா” என மனதுக்குள் நினைத்தவாரே ராமானுஜத்தை பின் தொடர்ந்து சென்றான் ரவி.

“என்ன ரவி மிகுந்த குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று உங்கள் முகம் சொல்கிறதே. நீங்கள் கேட்பதற்கு முன் நானே சொல்கிறேன், நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது அனைத்தும் உண்மையே, கழகத்தின் கட்டுப்பாட்டில் இந்த உலகத்தை கொண்டுவரச்செய்யும் முயற்சியில்தான் நான் ஈடுபட்டுள்ளேன். ஆனால்..”

“என்ன ஆனால்”

“டுமீல்..”

துப்பாக்கி வெடித்த திசையில் ஒரு உருவம் அவ்விருவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.

தொடரும்.. tbc..

ஏற்கனவே எழுதிய பதிவு, மீண்டும் எழுத ஆர்வம் எழுகிறது, தவறாமல் ஏதாவது கமண்ட் செய்யவும். அட்லீஸ்ட் திட்டிட்டாவது போங்க.. இவையாவும் கற்பனையே. work of inspiration

Tuesday 30 April 2013

இரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு. பாகம் II

இரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு. பாகம் 1

Monday 29 April 2013

இரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.

அத்தியாயம் 1: இரகசியம்

“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பராந்தக  மகாராஜா, பராக்!” என்று ரவி முன் கூவினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு இது கண்டிப்பாக கனவாகதான் இருக்க முடியும் என்ற நம்பினான். தான் இதுவரை சினிமாவில் பார்த்த ராஜாக்கள் போல் அவர் இல்லை, தன் அருகே அவர் வருவதை உணர்ந்தான். “மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன்”

ரவி தூக்கத்திலிருந்து எழுந்தான். “செ.. கனவா”, சுற்றி பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவன் இருக்கும் இடம் புதிதாக இருந்தது. எவ்வளவு யோசித்து பார்த்தும் எப்படி இங்கே வந்தோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, அவன் இருந்த அறை ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ஏதோ ஆய்வகம் போல் இருந்தது. தன்னை சுற்றி ஒரு கண்ணாடி திரை உள்ளதை அதில் இடித்துக்கொண்ட பின் தான் தெரிந்தது.

“யாராவது இருக்கீங்களா? நான் எங்க இருக்கேன் நீங்கயெல்லாம் யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல, கதவ திறங்க” பூட்டிய கதவை நோக்கி தன்னால் முயன்றவரை கத்திக்கொண்டிருந்தான் ரவி.

தான் சிறைப்படுத்தப்பட்டுள்ள  அறையை சுற்றிப்பார்த்தான், காலியான அறையின் நடுவே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் இருந்தன. அறை மேலிருந்த சிறிய இடைவெளி மூலம் வெளிச்சம் பரவியது. காலடி ஓசை கேட்டவுடன் “யாரா அது, விளையாடாதீங்கடா, ரூம திறந்து விடுங்கடா என்று புலம்பினான்.

கதவு திறக்கப்பட உள்ளே இருவர் நுழைந்தனர். “ சார், அந்த சேர்ல உட்காருங்க, எங்க பாஸ் உங்ககிட்ட பேச வர்றார்”

“மரியாதயெல்லாம் வேனாம்டா, என்ன இப்படியே விட்ருங்க, நான் அப்படியே ஓடிபோயிடுவேன்.” என்றான் இரவி. அவ்விருவர் மூலம் உட்காரவைக்கப்பட்டான்.

சில நிமிடங்களில் ஒருவர் வந்து மேஜையின் எதிரில் உட்கார்ந்தார். “வெல்கம் மிஸ்டர் இரவி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்”. “ யார் சார் நீங்க, ஒரு காரணமும் இல்லாம் என்ன இங்க கடத்திட்டு வந்து இப்ப என்னவோ நலம் விசாரிக்குறீங்க?”.ரவி வினவினான்.

என் பேர் இராமானுஜம், உங்ககிட்ட இப்ப சொல்ல போற விஷயத்தை கவனமா கேளுங்க.” நீங்க கனவு கான்பது உண்டா?” ரவி உடனே “என்ன சார் என்ன வெச்சு ஏதாவது காமடி பண்றீங்களா, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் யாரு, எதுக்கு இப்போ தேவயே இல்லாம இந்த கேள்வி” என்று கத்தினான்.”

“கொஞ்சம் பொறுமையா கேளுங்க, உங்க கனவ பத்தி நான் இப்போ சொன்னா நீங்க என்ன நம்புவீங்கனு நினைக்குறேன்.” இராமானுஜம் ரவி கண்ட கனவை கூட இருந்து பார்த்ததுபோல் விவரித்தார்.மேலும் “ரவி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே, கணவு இல்லை” என்று முடித்தார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமானுஜம் அடுத்து சொன்னதை கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.“நான் தான் அவர்னு நீங்க சொன்னீங்கனா நீங்க என்ன பைத்தியமா”. என்று கூறிய ரவிவை செய்கையில் அமைதியாய் இருக்க சொல்லி அவர் மேலும் தொடர்ந்தார்.

"நினைவு என்றால் என்ன?"

"ம்..ஞாபகப்படுத்தி கொள்ளுதல்"

"அதாவது குறிப்பிட்ட நபரின் நினைவு சரிதானே"

"ம்.."

"அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் இல்லாமல் அவருடைய முன்னோர்களின் நினைவும் அவனிடையே இருக்கும் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்."

"போன வாரம் நடந்தத பத்தி கேட்டாவே நான் யோசிப்பேன். நீங்க என்னனா, நம்புற மாதிரி சொல்லுங்க"

"மரபுசார் நினைவாற்றல். புலம்பெயர்வு . செயலற்றிருத்தல் இனப்பெருக்கம் இவையெல்லாம் விலங்குகளுக்கு யார் சொல்லித்தந்தது. என்னுடைய முப்பது ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் இந்த மரபுசார் நினைவாற்றல். நம்முடைய மரபணுக்களில் நமது முன்னோர்களின் வழிமுறையையும் சேர்த்து, அவர்களின் நினைவுகளையும் நாம் கண்டறிய முடியும். அத்ற்க்கான பொறியையும் நான் கண்டுபிடித்துவிட்டேன்."

"நீங்க சொல்றது நம்பவும் முடியல, நம்பாவமும் இருக்க முடியல, அப்ப என்ன பத்தி சொன்னது உன்மைதானா?"

"உங்க மரபணுவும் அகழ்வாராய்ச்சியில் கிடச்ச அவரோட மரபணுவும் நூறு சதவிகிதம் சரியாக பொறுந்துகிறது.ஆமாம் மிஸ்டர் இரவி நீங்கதான் பல தலமுறைக்கு முன்னால் வாழ்ந்த "இராஜ இராஜ சோழன்." அவர்களுடைய வாரிசு. உங்களுடைய மரபணு நினைவுகள் மூலம் நாம் பல ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்."

அத்தியாயம் 2: பொறி

ஆச்சிரியத்தில் இருந்த  ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்.  சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.  சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள்  சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி,  ரவி, இவங்க தான் என்னோட இந்த  ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.

"நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது" என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.

"மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க" பயத்துடன் ரவி வினவினான்.

"கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை.  உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல்  கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்."

"அப்ப என் வேலை"

"அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை  உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா?"

"கனவா இல்லை நினைவா"

"சபாஷ்.  உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும்  உங்கள் நினைவுகள் மறுபடியும்  பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்."
சாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.

"திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது."

" ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க  முடியும்."

ரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.

"சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க".

"அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… "

மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ”

தன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ)  ராஜ ராஜ சோழன்.

அத்தியாயம் 3: இரத்த அரியணை

அடுத்த நாள் காலை

நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா?” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

நீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.

சோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில்  ஐந்து மன்னர்கள்  சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன்  எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன.  ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.

“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால்  நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,

மரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது.

மேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.

“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”

“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும்.  இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”

அவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு  மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு  கண்டிப்பாக  ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த  மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு,  நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”

“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”

“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும்.  என  உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”

“வாழ்த்துக்கள் சார்”

“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன,  இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”

“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.

தொடரும்…       tbc..

போன வருட விடுமுறையில் ஏற்கனவே எழுதிய பதிவு, மீண்டும் எழுத ஆர்வம் எழுகிறது, தவறாமல் ஏதாவது கமண்ட் செய்யவும். அட்லீஸ்ட் திட்டிட்டாவது போங்க.. இவையாவும் கற்பனையே.

inspired from kalki...