Tuesday, 27 September 2011

ஹவர் சைக்கிள்சைக்கிள் ஒட்ட தெரியாது என்றால் முகப்புத்தகத்தில் அக்கவுன்ட் இல்லை என்பது போல, என் வீடு மௌன்ட் ரொடில்(அண்ணாசாலை) இருந்ததால் அப்பா சைக்கிள் ஓட்ட சொல்லிக்கொடுப்பதில்லை, வருடமொருமுறை அத்தை வீட்டிற்கு கொளத்தூர் செல்லும் பொழுது ஹவர் சைக்கிள் எடுத்து மாமாவின் உதவியுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

அப்பொழுது நான் 5ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், என் அத்தைக்கு இரண்டு பெண்கள், அரையாண்டு விடுமுறைக்கு அத்தை வீட்டிற்க்கு சென்றபோது, அங்கே மூத்தவள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாள்,  வெட்கமாய் இருந்தது, அன்றே மாமாவிடம் சொல்லி சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன், ஓட்டுவதென்றால் காலை இருபுறமும் கீழே வைத்து தள்ளிக்கொண்டிருந்தேன்,கொளத்தூர் சாலைகலை பற்றி சொல்லத்தேவையில்லை,  கீழே இருந்த பாறையில் பட்டு கட்டைவிரல் நகம் பெயர்த்துக்கொண்டது, காலில் இருந்த இரத்தததை பார்த்து பயந்து விட்டனர், ஒரு வார இராஜவாழ்க்கையென்றாலும் சைக்கிள் ஓட்டுவது எட்டாக்கனியானது.

அண்ணாசலையிலிருந்த வீட்டை விற்றுவிட்டு, இராஜ்பவன் அருகே குடிபெயர்ந்தோம், பக்கத்தில் திடல் இருந்ததால் வார இறுதியில் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு ஒருவழியாக சைக்கிள் கற்றுக்கொண்டேன். பிறகு என் பொழுதுபோக்கு சைக்கிள் ஓட்டுவது மட்டுமே, பள்ளியில் இருந்து வந்தவுடனே, ஐந்து ருபாய் எடுத்துக்கொண்டு ஹவர் சைக்கிள் கடைக்கு ஓடுவேன், தாமதமாக சென்றால் ஓட்டை சைக்கிள்தான் கிடைக்கும், கொக்கு சைக்கிள் ஒரு மணி நேரத்திற்க்கு மூன்று ருபாயும், சாதா சைக்கிள் இரண்டரை ருபாய்க்கும் கிடைக்கும். ஐம்பது பைசாவின் அருமை அறிந்த காலம். பின்பு அப்பாவிடம் கெஞ்சி பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கி என் முதல் சைக்கிள் வாங்கினேன். mtb hercules என் முதல் சைக்கிள், நான் கடைசியாக பயன்படுத்திய சைக்கிள், .BSA-slr சும்மா பறக்கும்.Tuesday, 13 September 2011

hero

நீங்க ஹீரோவாக எப்பவாவது முயற்சி செய்ததுண்டா.

"ஓ** பாத்து போடா"- ஒரு மாலை மயங்கும் நேரத்தில் மழை சாரலை இரசித்துக்கொண்டே வண்டியில்  தவறான பாதையில் சென்ற என்னை சரி செய்தது. மணி பத்தை நெருங்கிகொண்டிருந்தமையால் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்து வேகத்தினை அதிகப்படுத்தும் பொழுது அந்த சம்பவம் நடைபெற்றது. 

நான் சென்ற வேகத்தை விட அதிவேகமாக என்னை கடந்து சென்றனர் ஒரு ஜோடி சாலை நடுவே இருந்த தடையில் முட்டி தடுமாறி கீழே விழுந்தனர். இவர்கள் விழுவதர்க்காகவே காத்துகிடந்தபோல் இரண்டு பேர் சட சடவென ஓடி சென்று அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை பறிக்க முயற்சி செய்தனர். என்னை பார்த்ததும் ஒருவன்  மிரண்டுவிட்டான். கையில் கத்தியுடன் என்னுருகே வந்து " போடா  போ " என்று மிரட்டினான். எங்கிருந்து இவ்வளவு கோபம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை தலைகவசத்தை கழற்றி அவனை அடித்தேன். கையில் இருந்த கத்தி நழுவிய நேரம் பார்த்து தலையில் ஒரு அடி அடித்ததும் மயங்கி விழுந்து விட்டான். இதை பார்த்த இன்னொருவன் என் மீது பாய்ந்தான். அவனது கத்தி என் தோளை பதம்பார்த்தது வலி பொறுக்கமுடியாமல் கத்திவிட்டேன். இன்னொருமுறை கதியை ஓங்கும் பொழுது அவனை எட்டி உதைத்தேன். என்னுள் இருந்த மிருகம் அவனை வேட்டையாட துவங்கியது. சரமாரியான குத்துகள் அவன் முகத்தில் விழுந்தது. சில நொடிகளுக்கு பிறகு அவனும் மயங்கினான். எதையோ சாதித்துவிட்ட எண்ணம் தோன்றியது. எழுந்து அந்த ஜோடியை பார்த்தேன், பயந்த நிலையில் என்னை பார்த்து நன்றி செலுத்தினர். ஜெர்கின் அணிந்திருந்ததால் லேசான கீறல் மட்டுமே இருந்தது. இதற்கு மேல் இருந்தால் பிரச்சனை என்பதால் வண்டியை கிளப்பினேன். 

வீட்டிற்கு வந்ததும் ஒரு நிம்மதி, இல்லை போதை, இல்லை இல்லை ஒரு வித்யாசமான உணர்வு. கண்ணாடிமுன் நின்றுகொண்டு என்னையே ஒரு முறை பார்த்தேன். அதே சராசரியான உடம்பு, புதிதாய் ஒன்றும் இல்லை அனால் உடம்பில் ஒரு விஷம் ஏறிய உணர்வு. கீறிய இடத்தை கழுவி பிளாஸ்டர் ஓட்டினேன். 

"ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் காதல் என்ற ஒற்றை உணர்ச்சி மட்டும் கொண்டாடப்படுகிறது. நியாமாக கோபப்பட்டால் கூட என்னை நிறுத்துகிறார்கள்.குரோதம் ரௌத்திரம் இவை யாவும் மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

சிலரிடம் கேட்டால் நான் கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டேன் அதை நீ இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்ற பதில் வரும். நம்மில் எவரும் சாது இல்லை. பிறரிடம்வுள்ள கோபத்தை நமக்கு கீழ் உள்ளவரிடம் காண்பிக்கின்றோம்." இன்று ஆபீசில் எங்கோ படித்தது.
 
ரௌத்திரம் பழகு என்று சிறு வயதில் படித்ததோட சரி, பள்ளியில்  எந்த ஆசிரியரும் இச்செயலை ஆமோதிக்கவில்லை. அளவிற்கு மிஞ்சாதவரை எல்லாம்  அமிர்தமே. 
 
நான் அவர்களை காப்பாற்றியதாக துளிகூட நினைக்கவில்லை, என் கோபம்தான் அவர்களையும் என்னையும் காப்பாற்றியது. கோபம் ஒரு தெய்விக உணர்வு. நாம ஏன் ஒரு ஹீரோ அவதாரம் எடுக்ககூடாது என்று தோன்றியது. நினைக்கவே காமடியா இருக்கு, ஆனாலும் ஒரு சின்ன தீப்பொறி ஊரையே அழிச்சிடும். 
 
தொடரும்...