Saturday 1 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 1: ரகசியம்




“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பராந்தக  மகாராஜா, பராக்!” என்று ரவி முன் கூவினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு இது கண்டிப்பாக கனவாகதான் இருக்க முடியும் என்ற நம்பினான். தான் இதுவரை சினிமாவில் பார்த்த ராஜாக்கள் போல் அவர் இல்லை, தன் அருகே அவர் வருவதை உணர்ந்தான். “மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன்”

ரவி தூக்கத்திலிருந்து எழுந்தான். “செ.. கனவா”, சுற்றி பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவன் இருக்கும் இடம் புதிதாக இருந்தது. எவ்வளவு யோசித்து பார்த்தும் எப்படி இங்கே வந்தோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, அவன் இருந்த அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

“யாராவது இருக்கீங்களா? நான் எங்க இருக்கேன் நீங்கயெல்லாம் யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல, கதவ திறங்க” பூட்டிய கதவை நோக்கி தன்னால் முயன்றவரை கத்திக்கொண்டிருந்தான் ரவி.

தான் பூட்டப்பட்டிருக்கும் அறையை சுற்றிப்பார்த்தான், காலியான அறையின் நடுவே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் இருந்தன. அறை மேலிருந்த சிறிய இடைவெளி மூலம் வெளிச்சம் பரவியது. காலடி ஓசை கேட்டவுடன் “யாரா அது, விளையாடாதீங்கடா, ரூம திறந்து விடுங்கடா” என்று புலம்பினான்.

கதவு திறக்கப்பட உள்ளே இருவர் நுழைந்தனர். “ சார், அந்த சேர்ல உட்காருங்க, எங்க பாஸ் உங்ககிட்ட பேச வர்றார்”
“மரியாதயெல்லாம் வேனாம்டா, என்ன இப்படியே விட்ருங்க, நான் அப்படியே ஓடிபோயிடுவேன்.” என்றான் இரவி. அவ்விருவர் மூலம் உட்காரவைக்கப்பட்டான்.

சில நிமிடங்களில் ஒருவர் வந்து மேஜையின் எதிரில் உட்கார்ந்தார். “வெல்கம் மிஸ்டர் இரவி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்”. “ யார் சார் நீங்க, ஒரு காரணமும் இல்லாம் என்ன இங்க கடத்திட்டு வந்து இப்ப என்னவோ நலம் விசாரிக்குறீங்க?”.ரவி வினவினான்.

என் பேர் இராமானுஜம், உங்ககிட்ட இப்ப சொல்ல போற விஷயத்தை கவனமா கேளுங்க.” நீங்க கனவு கான்பது உண்டா?” ரவி உடனே “என்ன சார் என்ன வெச்சு ஏதாவது காமடி பண்றீங்களா, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் யாரு, எதுக்கு இப்போ தேவயே இல்லாம இந்த கேள்வி” என்று கத்தினான்.”

“கொஞ்சம் பொறுமையா கேளுங்க, உங்க கனவ பத்தி நான் இப்போ சொன்னா நீங்க என்ன நம்புவீங்கனு நினைக்குறேன்.” இராமானுஜம் ரவி கண்ட கனவை கூட இருந்து பார்த்ததுபோல் விவரித்தார்.மேலும் “ரவி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே, கணவு இல்லை” என்று முடித்தார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமானுஜம் அடுத்து சொன்னதை கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.“நான் தான் அவர்னு நீங்க சொன்னீங்கனா நீங்க என்ன பைத்தியமா”. என்று கூறிய ரவிவை செய்கையில் அமைதியாய் இருக்க சொல்லி அவர் மேலும் தொடர்ந்தார்.

ரா: நினைவு என்றால் என்ன?

ர: ஞாபகப்படுத்தி கொள்ளுதல்

ரா:அதாவது குறிப்பிட்ட நபரின் நினைவு சரிதானே

ர: ம்..

ரா: அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் இல்லாமல் அவருடைய முன்னோர்களின் நினைவும் அவனிடையே இருக்கும் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

ர: போன வாரம் நடந்தத பத்தி கேட்டாவே நான் யோசிப்பேன். நீங்க என்னனா, நம்புற மாதிரி சொல்லுங்க

ரா: மரபுசார் நினைவாற்றல். புலம்பெயர்வு . செயலற்றிருத்தல் இனப்பெருக்கம் இவையெல்லாம் விலங்குகளுக்கு யார் சொல்லித்தந்தது. என்னுடைய முப்பது ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் இந்த மரபுசார் நினைவாற்றல். நம்முடைய மரபணுக்களில் நமது முன்னோர்களின் வழிமுறையையும் சேர்த்து, அவர்களின் நினைவுகளையும் நாம் கண்டறிய முடியும். அத்ற்க்கான பொறியையும் நான் கண்டுபிடித்துவிட்டேன்.


ர:நீங்க சொல்றது நம்பவும் முடியல, நம்பாவமும் இருக்க முடியல, அப்ப என்ன பத்தி சொன்னது உன்மைதானா?

ரா:  உங்க மரபணுவும் அகழ்வாராய்ச்சியில் கிடச்ச அவரோட மரபணுவும் நூறு சதவிகிதம் சரியாக பொறுந்துகிறது.ஆமாம் மிஸ்டர் இரவி நீங்கதான் பல தலமுறைக்கு முன்னால் வாழ்ந்த "இராஜ இராஜ சோழன்." அவர்களுடைய வாரிசு. உங்களுடைய மரபணு நினைவுகள் மூலம் நாம் பல ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்.




தொடரும்......tbc..

No comments:

Post a Comment