Monday 31 October 2011

வாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’




கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.

சில தினங்களுக்கு முன்..
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர விடுதி.

ரெஸ்டாரண்ட்

“இன்னும் எவ்வளவு நாளைக்குதான் நாம இப்படி ரகசியமாக  சந்திப்பது. இனிமேல் ஒரு நிமிஷம்கூட காத்திருக்க முடியாது. உடனே ஒரு முடிவெடுங்க, குருவுக்கு என்மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன். அவரு பேச்சே சில நாளா சரியில்ல, எனக்கென்னவோ நம்மோட விஷயம் அவருக்கு தெரிஞ்சிடுச்சுனு தோனுது.” படபடப்புடன் கூறினால் திவ்யா.

“கொஞ்சம் பொறுமையா இரு, உன் கணவன் சாதாரண ஆளா இருந்தா எப்பயோ அவன் கதைய முடிச்சிருப்பேன். அவன கொலை பண்றது பெரிய விஷயமில்ல ஆனா ஒரு தடயமில்லாம கச்சிதமான   வேலைய முடிக்கனும். நீயும் நானும் பழகற விஷயம் வெளிய தெரிஞ்சா முதல் குற்றவாளியா நம்ம ரெண்டு பேரதான் பார்ப்பாங்க, இன்னும் ரெண்டு வாரத்துல அவன் சென்னை வருவதாக  சொன்னல அப்ப அவன தீர்த்துகட்ட கூலிப்படைய தயார் பண்ணிட்டேன், அவன் கொலை ஒரு விபத்து மாதிரிதான் வெளிய தெரியும். ”

“எனக்கென்னவோ பயமா இருக்குங்க”

“நீ கவலைபடாத எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”
------------------------

அதே ஓட்டலின் பாரில் குணா மற்றும் ராஜா.

“எப்படா சரக்கு வருது”

“இன்னைகு ராத்திரி சரக்கு கைக்கு வந்திடும், இவ்வளவு நாளா பிரச்சனை பண்ணிட்டிருந்த  போர்ட் கஸ்டம்ஸ் ஆபிஸரும் திடீர்னு ஒ.கே சொல்லிட்டாரு, பல கோடி ருபாய் மதிப்புள்ள சரக்கு  கைமாறும் போது நமக்கு கமிஷனா ஆறு லட்சம் குபாய் கிடைக்கும். எஸ்.பி கோகுல் தான் இந்த டிவிஷன்ல இருக்காரு, அதனால நமக்கு எந்த பிரச்சனையில்லாம சென்னை எல்லைய தாண்டிடலாம். போர்ட் கிட்ட இருக்குற N4 மீன்பிடித்துறைமுகத்துக்கு வரும் சனிக்கிழமை சரக்க எடுத்துட்டு வரச்சொல்லியிருக்கார்.”

“மச்சி, இன்னும் எவ்வளவு நாளைக்குதான் மத்தவங்களுக்காக உயிர பணயம் வெச்சு வேல செஞ்சு அவங்க குடுக்குற எச்ச காசுக்காக அலையுறது. எங்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு, உனக்கு ஓ.கேனா சொல்லு.”

“அமாம்டா இப்படி சின்ன சின்ன கடத்தல் வேல பார்க்குறதுக்கு ஒரு பெரிய ப்ளான் பண்ணி செட்டிலாகிடனும். அப்பறம் ஜாலியா வாழ்க்கைய எஞ்சாய் பண்ணனும். நீ என்ன யோசிச்சு வெச்சிருக்கனு சொல்லு.”

“இன்னைக்கு கிடைக்குற சரக்கோட மதிப்பு பத்து கோடி, அத நாம எஸ்.பி கோகுல்கிட்ட பத்திரமா ஒப்படைக்கிறதுதான் உத்தரவு. எப்படியும் எஸ்.பி தனியா வருவான். நேரம் கிடைக்கிறப்போ அவன போட்டுத்தள்ளிட்டு சரக்கோட இந்த நாட விட்டே எஸ்கேப் ஆகிடலாம்.”

“மச்சி நீ சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா அந்த எஸ்.பி ரொம்ப மோசமானவன், அவங்கிட்ட ரொம்ப கவனமா  இருக்கனும்.”

“நீ கவலைபடாத மச்சி, எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”

------------------------
ஓட்டலின் ஒரு அறையில் சி.ஐ.டி. தலைவர் அர்ஜுனனும், உளவாளி விஷ்னு.

“சார் ரொம்ப நாளா நாம தேடிகிட்டிருந்த கடத்தல்காரர்களின் நெட்வர்க்ல ஒரு பெரிய துப்பு கிடச்சிருக்கு, அந்த கடத்தல்காரர்களுக்கும் நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்குற ஒரு உயரதிகாரிக்கும் தொடர்பு இருக்கு. அதனால தான் ஒவ்வொரு தடவையும் நாம சோதனைகல பலப்படுத்தும் போதும் நமக்கு ஒன்னும் சிக்கறதில்ல.”

“அது யாருனு கண்டுபிடிச்சுட்டீங்களா?”

“நம்ம எஸ்.பி. கோகுல் தான் சார் அது.”

“என்ன  விஷ்னு சொல்றீங்க, நம்பவே முடியல, நீங்க சொல்றது உண்மையாகவே இருந்தாலும், ஒரு வலுவான ஆதாரமில்லாம்  நம்மலால ஒன்னும் பண்ண முடியாது.”

“நம்ப எஸ்.பி இதுல சம்பத்தப்பட்டிருக்கார்னு தெரிஞ்சதுமே நான் முழு வீச்சுல ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன், அடுத்த சனிக்கிழமை ஒரு மிகப்பெரிய கள்ள வியாபாரம் நடக்க போகிறது, அதுக்கு உதவபோறது எஸ்.பி.தான். சரியான நேரத்துல போனா அந்த கடத்தல்காரர்களோட சேத்து எஸ்.பி. கோகுலையும் அரஸ்ட் பண்ணிடலாம்.”

“விஷ்னு நீங்க அந்த கடத்தல் கூட்டத்த தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருங்க, அவங்க ப்ளான்ல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, சென்னைய கலக்கிட்டிருக்க அந்த கூட்டத்த கூண்டோட கைது பண்ணனும். உங்க பாதுகாப்பிற்காக துப்பாக்கி பயன்படுத்த முழு அனுமதி கொடுக்குறேன்.”

“ரொம்ப நன்றி சார், இந்த விஷயம் டிபார்ட்மென்ட்ல  நம்ம ரெண்டு பேர தவிர வேற யாருக்கும் தெரியாது, பின்னர் ஏதாவது பிரச்சனைனா நீங்க ஒருவர்தான் என்ன காப்பாத்த முடியும்.”

“ நீங்க எதுக்கும் கவலபட வேணாம், எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.”

------------------------
ஓட்டலுக்கு வெளியில் ஒரு டீ கடையில் தணா மற்றும் வின்ஸன்ட்

“மச்சி எவ்வளவு நாள்றா டாஸ்மாக்லெயே காலத்த தள்ளுறது, என்னைக்காவது ஒரு நாள் அந்த பைவ் ஸ்டார் பார்ல போய் சரக்கடிக்கணும்டா.”

“டேய் கவலையவிடு, அடுத்த வாரம் ஒரு வேல, சிம்பில் மர்டர், ஆள் பேரு குரு , கோடீஸ்வர வீட்டு புள்ள, நம்ம லாரிய விட்டு துக்கறதுக்கு பேரம் பேசி இருக்கேன், வேல முடிஞ்ச உடனே அஞ்சு லட்ச ருபாய் கையில நிக்கும். அட்வான்ஸா ஒரு லட்சம் பார்டி குடுத்திருக்கு. “

“ஆமா பார்டி யார்னு தெரியுமா?”

“எப்படா நம்ம அத பத்தி விசாரிச்சிருக்கோம், கையில காசு, வாயில தோசனு போயிட்டிருக்க வேண்டியதுதான்.”

“இல்லடா நாம போடற ஆளு கோடீஸ்வரனு சொல்ற, அப்பறம் ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”

“மிஞ்சி மிஞ்சிப்போனா ஆக்ஸிடன்ட் கேஸ்தான் ஆகும், நீ எதுக்கும் கவலபடாத, நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்.”

------------------------

N4 மீன்பிடித்துறைமுகம் நேரம் அதிகாலை 2மணி.

குணா மற்றும் ராஜா இருவரும், கடத்தல் சரக்குடன் எஸ்.பி வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் எஸ்.பி தனியாக காரில் வந்தார்.

“என்ன குணா ரொம்ப பதட்டமா இருக்க மாதிரி இருக்கு”

“இல்ல சார், பல கோடி ருபா சரக்கு, தலைவர் முதல் தடவையா எங்கள நம்பி அனுப்பிருக்கார், பத்திரமா இருக்கனும்ல அதான்.”

“சரி சரி சீக்கிரம் சரக்கெல்லாம் என் வண்டியில ஏத்து”

மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலின் கழுத்தில் குத்தினான் குணா, சில நொடிகளில் துடிதுடித்து இறந்தான்.

“ம்.. சீக்கிரம், சரக்க எஸ்.பி வண்டியில ஏத்து, அவரு வண்டினால எந்த பிரச்சனை இருக்காது, பத்து கோடி ருபாய் சரக்கு, மூனா பிரிச்சு, ஒரு பங்கு வித்துக்குடுக்குற ஏஜண்டுக்கு, மீதி ரெண்டு நமக்கு, 10 கோடிய மூனா பிரிச்சா என்னடா வரும்..//”

தன் கையிலிருந்த வீச்சருவாவை கொண்டு குணாவை வெட்டினான் விண்சன்ட்.

“ஏண்டா………”

“மச்சி நான் கணக்குல வீக்குனு தெரியுமுல, பத்து கோடிடா, அத ஏன் தேவயில்லாம பங்கு போட்டுகிட்டு.”

-----------------

விஷ்னு தன் கையிலிருந்த காகிதத்தை இறந்த எஸ்.பி கோகுலின் சட்டைப்பையில் தினித்தான்.

அடுத்த நாள் காலை சி.ஐ.டி. தலைமை அலுவலகம்.

“சார் எஸ்.பி. கோகுல் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார், அவரை கொலை செய்தவனும் அருகில் பிணமாக இருக்கிறான், அவர் சட்டைப்பையில் இந்த காகிதம் இருந்தது.” என ஒரு காகித துண்டை தலைவர் அர்ஜுனனிடம் கொடுத்தார் ஒரு ஊழியர்.

அதில் இருந்ததை பார்த்து படித்துக்கொண்டிருக்கும் போதே, விஷ்னுவிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன விஷ்னு"


" சார் நான் உங்களுக்கு அனுப்பின சீட்டு கிடைச்சுதா”

“ம். கிடச்சுது, இப்ப டேபில் மேலதான் இருக்கு, முதல்ல ஒன்னும் புரியில இப்பதான் இறந்த  கோகுலோட  சட்டைப்பையில் கிடச்ச காகிதத்தோட ஒத்துப்போகுது , எஸ்.பிய கொலை பண்ணவங்க யாரு, அங்க என்ன நடந்தது.”

“சார், நான் எஸ்.பிய தொடர்பு கொண்டு, ஏஜண்ட் போல பேசி, அடுத்த கடத்தல் பொருள் வர கண்டேயினர்னு சொல்லி ஒரு அடையாள குறியீட அவருக்கு அனுப்பினேன் அதுதான் அவர் சட்டைப்பையில் இருந்தது. அவரு கீழ வேல செஞ்ச பசங்களோட பணத்தாசையில அவர கொலை பண்ணியிருப்பங்கனு நினைக்கிறேன். இப்ப நான் அந்த கூட்டத்துல ஒருத்தனா மாறிட்டேன், அதோட தலைவர் யாருனு இன்னும் சில நாளுல கண்டுபிடிச்சுடுவேன்.”

“மீதி விஷயங்கள அப்பறம் பேசுறேன், என்னால தொடர்ந்து பேச முடியாது.”


விஷ்னு ஒரு காரில் ஏறி அமர்ந்தான்.

பாஸ், நான் உங்க கடத்தல் கூட்டத்துல சேர்ந்த மாதிரி சி.ஐ.டி தலைவரை நம்ப வச்சிட்டேன். எனக்கொரு சந்தேகம் பாஸ்.

என்னனு சொல்லு

“இல்ல இந்த எஸ்.பி கோகுல் உங்க மனைவியோட பழகுன ஒரே காரணத்துக்காகவா இந்த கடத்தல்ல ஒரு சம்பந்தமும் இல்லாத அவர சாமர்த்தியமா சிக்க வெச்சு அவர கொலை செய்தீங்க.”

“அவன் ஒரு தேசத்துரோகியாக்கனும்னு தான் நினைச்சேன், ஆனா அந்த பொடிப்பசங்க காசுக்கு ஆசப்பட்டு அவன ஒரேடியா முடிச்சுடானுங்க. ஆமா அந்த விண்சன்ட் என்ன ஆனான்”

“நம்ப ஆந்திரா டீலர்கிட்டயே விலை பேசியிருக்கான், அவனும் நம்ப சரக்கும் ரெட்டிகிட்ட பத்திரமா இருக்கு.”

“சரி அந்த ரேடியோவ போடு,” என விஷ்னுவிடம் கூறினான்.


பின்னால் வந்த லாரி அவர்கள் சென்ற காரில் மோத கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.

6 comments:

ravi said...

சும்மா ஒரு அவசரத்துல இன்னைக்கு எழுதுனது... மன்னிச்சிடுங்க..

Radhakrishnan said...

திட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. வாழ்த்துகள். நன்றி.

ravi said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

ravi said...

நன்றி.

middleclassmadhavi said...

கதையையும் கமெண்டையும் (சும்மா ஒரு அவசரத்துல இன்னைக்கு எழுதுனது... மன்னிச்சிடுங்க..) ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

ravi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி madhavi.

Post a Comment