Sunday, 11 December 2011

உன்னை ஒன்று கேட்பேன். 1“காதல் என் காதல் அது கண்ணீரில”

“மச்சி வலிக்குதுடா, அவ இப்படி சொல்வானு நினைக்கவே இல்லடா” கண்களை கசக்கியவாரு கூறினான் சிவா.

“போடாங்.., நீயும் ஃப்ரிண்டுனு சொல்லிட்டுதாண்டா திரிஞ்ச, திடிர்னு யார்கிட்டயும் சொல்லாம பெரிய மயிரு மாதிரி ப்ரொபோஸ் பண்ணா, சரி அத விட, இப்பென்ன, இவள விட்டா வேற ஆளே இல்லையா” என கூறினான் பாலா.

“ஆயிரம் பேர் இருந்தாலும், இவ மாதிரி இவ ஒருத்திதாண்டா, அப்படியே உள்ளுக்குள்ள வலிக்குதுடா, உயிரே போற மாதிரி இருக்கு.”

“உன்னோட வலி தெரியுதுடா, அதாண்டா லைஃப், அதாண்டா உண்மை, வலி இருக்கத்தான் செய்யும், ஆனா அந்த வலியோட மருந்து நம்மோட கையிலதான்  இருக்கு.”

“டேய் கிளம்புங்கடா, நானும் பாத்துட்டிருக்கேன், ஒரு கிங்ஸ் அடிச்சிட்டு அம்பது காசு மிட்டாய் வாங்க வக்கில்லாம அரைமணி நேரமா மொக்க போட்டுட்டிருக்கீங்க.” கடுப்புடன் கூறினார் அண்ணாச்சி.

“என்ன அண்ணாச்சி நீங்களே இப்படி சொல்றீங்க, புண்பட்ட மனச தேத்திக்கிட்டிருக்கோம்.”

“டேய் பசங்களா, உங்க வயசுல லவ்விங்கறது சூப்பர்ஸ்டார் போல, எப்ப வரும், எப்படிவரும், எங்க வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்.”

“இப்ப என்ன சொல்லவறிங்க”

“காதல் தோல்விதாண்டா உண்மையான காதல வாழவைக்கும்.”“ஓட ஓட ஓட ஒன்னும் புரியல”

அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம், சட்டென நினைவிற்கு வந்தது, பள்ளியில் என் ஜுனியர், பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும், சரி போய் எப்படி இருக்கிறாள் என்று கேட்க அருகில் சென்றேன்.

“ஹாய் என்னை ஞாபகம் இருக்கா?”

இரு புருவங்கள் சேர்ந்து ஒரு வித குழப்பத்துடன் என்னை பார்த்து நீ யார் என்று கேட்டது அவள் நெற்றியில் உண்டான சுறுக்கங்கள்.

“ம்.. சரியா ஞாபகம் இல்லையே, நீ எஸ்.ஆர்.ம் காலேஜா?”

“இன்னும் கொஞ்சம் முன்னாடி, ஸ்கூல்ல..”

 “சிவா, நீயா, ஆளே மாறிட்ட, எப்படி இருக்க”


“நான் சொன்னதும் மழை வந்துச்சா!”

“மச்சி கலக்குற, போன் நம்பர்லாம் வாங்கிட்ட, உனக்குள்ளேயும் ஒரு காதல் மன்னன் இவ்வளவு நாள் தெரியாம போச்சே” என்றான் ரவி.

“இல்லடா நேத்து அவள பாத்தேன், சரி போய் பேசிடலாம்னு ஹாய் சொன்னா, ஒரு மாதிரி மொரச்சா பாரு, அப்படியே திரும்பி ஓடிடலாம்னு நினச்சேன், அப்பறம் நல்லவேள அவளுக்கு ஞாபகம் வந்து பேசனா,  வழக்கமான கதையெல்லாம் பேசிட்டு கிளம்பும் போது அவளே நம்பர் கொடுத்தா.”

“மச்சி அவளுக்குள்ள உன்மேல ஒரு இதுடா, உடனே போன போடு”

“டேய் உனக்கு தெரியாதது இல்ல, அவகிட்ட ஏற்கனவே பல்பு வாங்கிருக்கேன், வேணாம்டா, அவ ஏதோ பிரண்டா நினைச்சு நம்பர் கொடுத்திருப்பா, நான் ஏன் லவ்வ சொல்லி இருக்குறதும் போனுமாடா”

“என்ன சொல்ல வர்ற, முதல்ல பிரண்டா பழகி, அப்பறம் லவ்வ சொல்ல ப்ளான் பண்ண அப்படியே மாடியில இருந்து தள்ளி விட்டுருவேன், முதல்ல லவ்வ அவகிட்ட சொல்லு, எது நடந்தாலும் அது நல்லதுக்குதான்.”

“அத சொல்லதாண்டா நைட் போன் பண்ணேன்.”

“சூப்பர், என்ன பேசுன”

“ஹலோ, நான் சிவா பேசுறேன்.”

“ஓ.. ஹாய் சிவா..” திவ்யா பேசினாள்

“ம்……..”

“எதுக்குடா இந்த கேப்” ரவி  கேட்டான். 

“அப்பறம் பேச்சு வரலடா”

“டேய் என்னடா சொல்ற”

“எம்.பி.ஏ. க்லாஸ்ல  ஸ்டாஃபஅ  சைட் அடிக்கும் போது திடீர்னு எழுப்பி அவங்களே கேள்விகேட்டா எப்படி இருக்கும், அதுமாதிரிடா”

"என்னதான் நடந்தது" 

“ஹலோ, நான் சிவா பேசுறேன்.”

“ம். அததான் முன்னாடியே சொன்னீங்களே”

“ம்.. அமாம்ல.. லைன்ல பிரச்சனைனு நினைக்குறேன், அப்ப நான் இவ்வளவு நேரம் பேசுனது உங்களுக்கு கேட்கலையா.” 

“அப்படி எதுவும் இல்லையே,  நீங்க மூச்சு விட்ற சத்தம் கூட கேட்குது.”

“இருக்காதே, நான் தனியாதானே இருக்கேன்.” சே.. தலையில் அடித்துக்கொண்டே பேச்சைத்தொடர்ந்தான் சிவா.

“இந்த வாரம் நீ ஃப்ரியா இருந்தா நாம மீட் பண்ணலாமா”

“ஓ.கே.. சனிக்கிழமை இவினிங் எங்க வீட்டுக்கு வாங்க”

"!?!"

தொடரும்...